காவலிலுள்ள ஏனையோரது உரிமைகளை மீறுவதாக அமையும்

ரிஷாட்டை அழைப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தினால்

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள ரிஷாட் பதியுத்தீனை அழைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டால், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையுமென பதில் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்கிரமரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 07/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை