அடுத்த ஆண்டு வரை கொரோனா தடுப்பு மருந்து சாத்தியம் இல்லை

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

கொவிட்–19 தொற்றுக்கான தடுப்பு மருந்தினை மேம்படுத்துவதன் பிந்திய கட்ட சோதனைகளில் ஆய்வாளர்கள் முன்னேற்றம் கண்டபோதும் 2021 முற்பகுதி வரை அது பயன்பாட்டுக்கு வருவதை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தீர்க்கமாக இருக்கும் நியாயமான முறையில் தடுப்பு மருந்தினை விநியோகிப்பதை உறுதி செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு செயற்பட்டு வருவதாக அந்த அமைப்பின் அவசர திட்டங்களுக்கான தலைவர் மைக் ரியான் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வைரஸ் தொற்று எண்ணிக்கை சாதனை அளவுக்கு அதிகரித்து வரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பல தடுப்பு மருந்துகளும் தோல்வி இன்றி 3 ஆம் கட்ட சோதனையை தற்போது முன்னெடுத்துள்ள நிலையில், “நாம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம்” என்று ரியான் தெரிவித்தார். இந்தத் தடுப்பு மருந்துகள் இதுவரை பாதுகாப்பான அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. “உண்மையில் அடுத்த ஆண்டு முதல் பகுதியிலேயே மக்கள் தடுப்பூசி பெறுவதை பார்க்கலாம்” என்று அவர் சமூக ஊடகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டார்.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை