தடைகளை தகர்த்து டெஸ்ட் போட்டி ஆரம்பம்

கொரோனா வைரஸ், மழை, போதிய வெளிச்சமின்மை என பல தடைகளை தகர்த்து கிரிக்கெட் போட்டி நேற்றுமுன்தினம் ஆரம்பமமானது.

இரசிகர்கள் இல்லாமல் டெஸ்ட் நடந்து சரித்திரம் படைத்தது.கொரோனா காரணமாக தடைபட்ட கிரிக்கெட் போட்டி மீண்டும் துவங்கியது.

இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நேற்றுமுன்தினம் சவுத்தாம்ப்டன், ஏஜஸ் பவுல் மைதானத்தில் துவங்கியது.

துவக்கத்தில் லேசான மழை வர, உணவு இடைவேளை வரை போட்டி பாதிக்கப்பட்டது.

அடுத்து 2:30 மணி நேரம் தாமதமாக போட்டி துவங்கியது. ஜோ ரூட்டுக்குப் பதில் களமிறங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், நாணயச் சுழற்சியில் வென்று துடுபாட்டத்தை தேர்வு செய்தார். ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் இடம் பெறவில்லை.

மேற்கிந்திய தீவு அணியில் கார்ன்வலுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.கேபிரியல் அபாரம் இங்கிலாந்து அணிக்கு பர்ன்ஸ், சிப்லே ஜோடி துவக்கம் கொடுத்தது.

இந்த அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை கீமர் ரோச் வீசினார். அடுத்த ஓவரை வீசிய கேபிரியல், 4வது பந்தில் சிப்லேவை ‘டக்’ அவுட்டாக்கி, அனுப்பி வைத்தார். இங்கிலாந்து அணி ரன் கணக்கை துவக்கும் முன்பே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.இங்கிலாந்து அணி 4.1 ஓவரில் 1 விக்கெட்டுக்கு, 3 ஓட்டங்கள் எடுப்பதற்குள், இரு முறை மழை காரணமாக போட்டி தடைபட்டது.

மீண்டும் போட்டி துவங்கிய போது கேபிரியல் ஓவரில், டென்லே அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்தார். 17.4 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில், தேநீர் இடைவேளையின் போது, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 34 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டென்லே (13), பர்ன்ஸ் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

கறுப்பின ‘லோகோ’ உலகம் முழுவதும் உள்ள கறுப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,

இங்கிலாந்து, மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் ‘பிளாக்ஸ் லிவ் மேட்டர்’ என்ற ஆதரவு வாசகம் அடங்கிய ‘ஜெர்சி’ அணிந்து களமிறங்கினர்.முழங்காலிட்டு.அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டை, போலிஸ் ஒருவர் தனது முழங்காலால் கழுத்தில் அழுத்தி கொன்றார். இதை நினைவு படுத்தும் வகையில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இரு அணி வீரர்களும் போட்டி துவங்கும் முன் முழங்காலிட்டு அமர்ந்தனர்.

மாறாத வழக்கம் நேற்றுமுன்தினம் நாணயச் சுழற்சியில் வென்ற பென் ஸ்டோக்ஸ், ஹோல்டரிடம் தனது கையை மடக்கி இடிக்கச் சென்றார்.

மாறாக ஹோல்டர், வழக்கமாக கைகுலுக்குவது போல, ஸ்டோக்ஸ் கையை பிடித்தார். பின் சுதாரித்து மாற்றிக் கொள்ள இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

முதல் விக்கெட் வீழ்த்திய விண்டீஸ் பவுலர் கேபிரியல் வழக்கம் போல சக வீரர்களுடன் கைதட்டி மகிழ்ந்தார். ஒருசிலர் கால்கள், முழங்கைகளை தட்டிக் கொண்டனர்.

இது புதியது நாணயச்சுழற்சில் வென்ற பென் ஸ்டோக்ஸ், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ‘ரோபோ’ கேமராவிடம் வந்து பேசினார்.

வர்ணனையாளர் சிறிது துாரத்தில் இருந்தார்.

கொரோனா அச்சம் காரணமாக போட்டியை காண இரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கேலரிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா காரணமாக தடைபட்ட கிரிக்கெட் போட்டி, 117 நாட்களுக்குப் பின் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது.

இருப்பினும் மழை காரணமாக அவ்வப்போது போட்டி பாதிக்கப்பட்டது. சமூக இடைவெளிகொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியை பின் பற்றுவது அவசியம்.

இதற்கேற்ப நேற்று முன்தினம் நாணயச் சுழற்சி நிகழ்வில் இரு அணி தலைவர் அருகருகே நிற்கவில்லை.

இரு வர்ணனையாளர்கள் இடையே 6 மீ., இடைவெளி பின்பற்றப்பட்டது.பத்திரிகையாளர்கள் அறையிலும் சமூக இடைவெளி இருந்தது.

Fri, 07/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை