அண்டை நாடுகளுக்கான அமெரிக்க எல்லைகள் பூட்டு

கனடா, மெக்சிகோ ஆகிய அண்டை நாடுகளுடனான எல்லைகள் ஓகஸ்ட்  20 ஆம் திகதி வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோர் அவசரத் தேவைகளுக்கு மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள். கொவிட்-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த முடிவை எடுத்ததாக அமெரிக்கா கூறியது.

கனடாவும் அமெரிக்காவும் சுமார் 4 மாதங்களாக அவற்றின் எல்லைகளை மூடியுள்ளன.

போக்குவரத்தை மீண்டும் அனுமதிப்பது தொடர்பில் 30 நாட்களுக்கு ஒரு முறை நிலைமை மதிப்பிடப்படும் என்று அமெரிக்கா தெரிவித்தது.

தற்போது அமெரிக்காவில் நாளுக்கு நாள் வைரஸ் பரவல் மோசமடைந்து வருகிறது.கடந்த சில நாட்களாக அங்கு முன்பு எப்போதும் இல்லாத அளவில் நோய்ப்பரவல் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவும் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தத் திணறி வருகிறது.

கனடா ஓரளவு வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியிருந்தாலும் இன்னும் சில இடங்களில் நிலைமை மோசமாகவே உள்ளது.

Sat, 07/18/2020 - 11:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை