போலியான வாக்குறுதிகளை உள்ளடக்கிய ஐ.தே.கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

பெரமுனவின் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கியது - லக்ஷ்மன் யாப்பா

போலியான வாக்குறுதிகள் உள்ளடங்கிய கொள்கை பிரகடனத்தையே ஐக்கிய தேசிய கட்சியின்தலைவர் ரணில் விக்ரமசிங்க மக்கள் மத்தியில் முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டமே பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமாகும்.

புதிய கொள்கைத்திட்டங்களை வகுக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் வாக்குறுதி வழங்குவதில் துறைபோனவர் . 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 100 நாள் திட்டத்தை தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிட்டார். ஆட்சி காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக இருந்த பல உரிமைகளும் இல்லாதொழிக்கப்பட்டன. நிறைவேற்ற முடியாத போலியான கொள்கைத்திட்டத்தையே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இந்த வாக்குறுதிகளுக்கு மக்கள் இம்முறை ஏமாற்றமடையமாட்டார்கள். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த கொள்கை பிரகடனம் நாட்டின் இறையாண்மைக்கு முரணானதென்ற காரணத்தினால் மக்கள் அக்கொள்கைகளை முழுமையாக புறக்கணித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிட்ட சுபீட்சமான எதிர்கால கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் கொள்கைத்திட்டத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆகவே அவர் தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்துக்கு புதிதாக கொள்கைத்திட்டத்தை தயாரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. கொவிட் - 19 வைரஸ் தாகக்கத்தை காரணம் காட்டி எதிர் தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்தி அதனூடாக பொதுத்தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார்கள். தேர்தல் சுகாதார பாதுகாப்பு அறிறுவுத்தல்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்பில் எவ்வித தேசத்திலும் எவ்வித குறைப்பாடுகளும் காணப்பட்டதாக இதுவரையில் அறிய முடியவில்லை வாக்களிக்க வாக்களார்கள் தயாராகவே உள்ளனர். போட்டியிட எதிர் தரப்பினர் தயாரில்லை என்பதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்கின்றனர் என்றார்

Sat, 07/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை