நோபல் விருது விழா ரத்து

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோபல் பரிசு வென்றோர்களுக்கான விருது விழா கடந்த அரை நூற்றாண்டில் முதல் முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.  

நோபல் வாரத்தை பூர்த்தி செய்யும் சம்பிரதாயமாக வெற்றியாளர்களுக்கு சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இந்த விருது விழா நடத்தப்படுகிறது.  

எனினும் 2020 ஆம் ஆண்டுக்கு நோபல் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். இதனை அடுத்தே வழக்கமாக டிசம்பர் 10 ஆம் திகதி சுமார் 1,300 விருந்தினர்களுடன் நோபல் விருது நடத்தப்படுகிறது.  

கடைசியாக 1956 ஆம் ஆண்டு சோவியட் ஒன்றியம் ஹங்கேரியாவை ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விருது விழா ரத்து செய்யப்பட்டது. முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர் காலத்திலும் இந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டிருந்தது.  

சுவீடன்நாட்டுடைனமைட்கண்டுபிடிப்பாளரும்வர்த்தகருமானஅல்பிரேட்நோபல்உருவாக்கியஇந்தவிருதில்விஞ்ஞானம், இலக்கியம்மற்றும்அமைதிபோன்றதுறைகளுக்காக1901 தொடக்கம்விருதுவழங்கப்பட்டுவருகிறது.     

Thu, 07/23/2020 - 10:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை