ஹொங்கொங்கில் கட்டுப்பாட்டை இழந்து பரவி வரும் கொரோனா

ஹொங்கொங்கில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் 100ஐ தாண்டியிருக்கும் நிலையில் அது கட்டுப்பாட்டை இழந்து பரவுவதாக அந்த நகரத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிராக புதிய சமூக இடைவெளி நடவடிக்கைகளை விதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் இந்தத் தொற்று ஆரம்பித்தபோது அதனால் பாதிக்கப்பட்ட முதல் பகுதியாக ஹொங்கொங் இருந்தது.

எனினும் அதன் பரவலை ஹொங்கொங்கினால் வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் அங்கு தொற்று எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. 7.5 மில்லியன் மக்கள் செறிந்து வாழும் இந்த நகரில் கண்டறியப்படாத வகையில் நோய் பரவுவதாக மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் 500க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் மொத்த நோய்த் தொற்று சம்பவங்கள் 1,788 ஆக அதிகரித்திருப்பதோடு 12 பேர் உயிரிழந்திருப்பதாக ஹொங்கொங் தலைமை நிர்வாகி கெர்ரி லாம் நேற்று குறிப்பிட்டார்.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை