கொரோனா வன்முறைகள்: சீனருக்கு மரண தண்டனை

கொரோனா வைரஸுக்கு எதிரான பயணச் சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து இருவரை கத்தியால் குத்திக்கொன்ற ஒருவருக்கு சீனாவில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மா ஜியாங்கு என்பவர் தமது நண்பருடன் தொலைதூர கிரமமான யுனானில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதித் தடுப்பு ஒன்றை எதிர்கொண்டார்.

அந்தத் தடுப்பை அகற்ற முயன்றபோது அங்கு காவிலில் இருந்த தன்னார்வலர்களுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது 24 வயதான ஜியாங்கு அங்கிருந்த இருவரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

கடந்த பெப்ரவரி இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சீன உச்ச நீதிமன்றம் ஜியாங்குவுக்கு மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கொரோனா தொற்று உச்சம் பெற்று நாடு முழுவதும் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டிருந்த கடந்த பெப்ரவரி மாதமே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது தொடக்கம் இந்தப் பிரச்சினையுடன் தொடர்புபட்டு சீனாவில் நூற்றுக்கணக்கானோர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினர்.

Fri, 07/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை