கென்ய மரதன் வீரருக்கு நான்கு ஆண்டு தடை

ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறிய கென்ய மரதன் வீரர் கிப்சாங்கிற்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக தடகளத்தின் நேர்மை கமிட்டி அறிவித்து உள்ளது.

நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் கென்யாவைச் சேர்ந்த வில்சன் கிப்சாங். மரத்தனில் உலக சாதனை படைத்திருக்கிறார். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மரதனில் வெண்கலம் வென்றிருந்தார். போட்டி இல்லாத காலத்தில் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருக்கும் வகையில் தான் எங்கே இருக்கிறேன் என்ற விவரத்தை அவர் ஊக்கமருந்து தடுப்பு முகாமைக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை.

அத்துடன் சோதனையை தவிர்க்க தவறான தகவல்களையும் அளித்திருக்கிறார். 13 மாதங்களில் 4 முறை அவர் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் 4 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக தடகளத்தின் நேர்மை கமிட்டி அறிவித்துள்ளது. தடை காலம் 2020-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

Mon, 07/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை