முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தி வரும் தலைவர்கள் எமது ஆட்சியிலும் இருந்தனர்

சகல இன மக்களையும் ஜனநாயக உரிமைகளுடன் வாழவைப்பதே இலக்கு − பிரதமர்

முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தி அதிகாரத்திற்கு வந்த முஸ்லிம் தலைவர்கள் தமது ஆட்சியிலும் இருந்ததாக பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.  

மக்களின் ஜனாநாயக உரிமைகளை இழக்கச் செய்வதற்கு ஐ.தே.கவை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முஸ்லிம் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளன கூட்டம் குருநாகலில் நேற்று நடைபெற்றது.  

பொதுஜன பெரமுனவிற்கு மூன்றின் இரண்டு பெரும்பான்மை வழங்க மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

இந்த நிகழ்வின் போது முஸ்லிம காங்கிரஸ் முன்னாள் குருநாகல் அமைப்பாளரும் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.தஸ்லீம்,குருநாகல் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினரும் மு.கா இளைஞர் அணி அமைப்பாளருமான சாபி ரபீக் ஆகியோர் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டார்கள்.  தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், சகல இனங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பிலுள்ள சில சரத்துகளினால் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தப்படுகிறது. சகல இனத்தவர்களையும் இணைக்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும்.இதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.  

இங்கு பொதுஜனபெரமுன தேசியப்பட்டியல் வேட்பாளர் அலி சப்ரியும் உரையாற்றினார். (பா)

ஷம்ஸ் பாஹிம்   

Fri, 07/10/2020 - 06:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை