இடம்பெயர்ந்து வாழ்ந்த முஸ்லிம்களுக்கு சொந்தக் காணியை வழங்கிய டக்ளஸ்

முன்பள்ளி, பள்ளிவாசல், மைதானம் அமைக்க உறுதிபத்திரம் கையளிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் நிர்க்கதியாக இருந்த வேளையில் அவர்களுக்கான அடிப்படை,  அத்தியாவசிய வசதிகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.  

அந்த வேளையில் அம்மக்களை தனது தனிப்பட்ட காணிகளில் குடியமர்த்தி அவர்களுக்கான வீடுகளையும் உருவாக்கிக் கொடுத்திருந்தார்.  

அக்காலத்தில் குடியிருப்பு நிலங்களுக்கான காணி உரிமங்கள் அம்மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அக்குடியிருப்பு மக்கள் தமது இதர தேவைப்பாடுகளான முன்பள்ளி, பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைச்சருக்கு சொந்தமான காணியில் உருவாக்கி செயற்பட்டு வந்திருந்தனர்.  

இந்நிலையில் முன்பள்ளி, பள்ளிவாசல், விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா ஆகியன அமைந்துள்ள காணிகளுக்கான காணி உரிமங்களை அவர்கள் பெற்றுக்கொள்ளாதிருந்த நிலையில் அதற்கான உரிமங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியிருந்தனர்.  

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரில் இருந்த அக்காணிகளுக்கான உரிமங்களை  நேற்றைய தினம் குறித்த நிர்வாகங்களிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Tue, 07/21/2020 - 06:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை