அவுஸ்திரேலியாவில் புதிய கொரோனா தொற்று சம்பவங்களில் சாதனை உச்சம்

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் நேற்று ஒரே நாளில் அதிக தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க நிலை நாட்டில் வைரஸ் தொற்று உச்சத்தை அடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்பும் நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிறன்று ஒரே நாளில் அதிக உயிரிழப்பு இடம்பெற்ற அடுத்த நாளில் குறைந்தது 549 புதிய கொவிட்–19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தொற்றாளர்களும் தென் கிழக்கில் விக்டோரியா மாநிலத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  மெல்போர்னில் ஏற்பட்டிருக்கும் இரண்டாவது அலை கொத்தணிகளை கட்டுப்படுத்துவதில் எதிர்பார்த்ததை விட காலம் எடுத்துக் கொள்வதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக ஐந்து மில்லியன் மக்கள் மீது கொண்டுவரப்பட்டிருக்கும் முடக்க நிலை வெற்றி அளித்து வருவதாக அந்த மாநில உயர் சுகாதார அதிகாரியான பிரெட் சட்டோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பதிவான அதிகபட்ச நாளாந்த நோய்த் தொற்று எண்ணிக்கையான 459 சம்பவங்கள் கடந்த வாரம் மூன்று தடவைகள் விஞ்சிக் காணப்பட்டன.

மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதால், விக்டோரியா மாநிலத்தில் 6 வார முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Tue, 07/28/2020 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை