கொரோனா தொடர்ந்து பரவும்: சுகாதார அமைப்பு எச்சரிக்ைக

கொரோனா பெருந்தொற்று முடிவிற்கான அருகில் கூட இன்னும் செல்லவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சீனாவில் 6 மாதங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரசால், ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு 5 இலட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்த மோசமான மைல்கல்லை எட்டியுள்ளோம் என குறிப்பிட்டார்.

இந்த சூழல் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பவே அனைவரும் விரும்புவதாகவும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது வரை இல்லை எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், கொரோனா வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸை அழிப்பது தொடர்பாகக் கண்டறியப்பட்டுள்ள ஆராய்ச்சிகளைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது என்று  உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை