ஜோர்தானில் ஆர்ப்பாட்டம் செய்த இலங்கையர் மீது கண்ணீர் புகை

தொழிலை இழந்த நிலை; இருவேளையே உணவு;

விரைவாக உதவிகளை வழங்க இலங்கை தூதரம் நடவடிக்ைக

ஜோர்தானில் அல்காரா பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டைகளில் பணிபுரிந்த 340 இலங்கையர்கள் தமக்கான அடிப்படைத் தேவைகள் கிடைப்பதில்லையென தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகத்தை  மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாம் அந்நாட்டில் பெரும் கஷ்டப்படுவதாகவும் விரைவாக தம்மை தாய்நாட்டுக்கு அழைத்துக் கொள்ளுமாறும் ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமக்கு இரண்டு வேளை உணவு மட்டுமே கிடைப்பதாகவும் தமது அடிப்படைத் தேவைகளுக்காக தாம் பெரும் துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜோர்தானில் தொழிலை இழந்து நிர்க்கதியாகியுள்ள இலங்கையர் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய நேற்றுத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் ஜோர்தானிலுள்ள இலங்கையர்கள் கடந்த ஐந்து மாதங்களாக தொழில்களை இழந்து பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அந்த நிலையில் இலங்கையிலுள்ள ஜோர்தான் தூதரகம் மூலம் அந் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு உரிய பணிப்புரை வழங்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம் அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் நேரடியாக அவர்களை சந்திப்பதற்கு சென்றிருந்த வேளையிலேயே அங்குள்ள இலங்கையர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தூதரக அதிகாரி ஒருவரை வீட்டுச்சிறையிலும் வைத்துள்ளனர். அந்த சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காகவே அந் நாட்டு பொலிஸார் சென்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெ ளியிட்டனர்.

இதனை கடடுப்படுத்துவதற்காகவே கண்ணீர்ப் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பிரதி முகாமையாளர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 07/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை