வடகொரியாவில் முதலாவது கொரோனா தொற்று சம்பவம்

முதலாவது கொரோனா வைரஸ் தொற்று சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் வட கொரியா, நாட்டின் எல்லை நகரான கேசொங்கில் முடக்க நிலையை அமுல்படுத்தியுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் கடந்த சனிக்கிழமை, அவசரக் கூட்டத்தை கூட்டி வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உச்ச அவசர நிலை மற்றும் உயர் மட்ட உசார் நிலையை பிறப்பித்ததாக அந்நாட்டு உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ குறிப்பிட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் தென் கொரியாவுக்கு தப்பிச் சென்ற நபர் ஒருவர் கடந்த வாரம் நாடு திரும்பிய நிலையில் கொவிட்–19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக தமது நாட்டில் கொரோனா சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று வட கொரியா கூறியபோதும் அது சாத்தியம் இல்லை என்று வல்லுநர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

எனினும் அண்டை நாடான சீனாவில் வைரஸ் பரவ ஆரம்பித்ததை அடுத்து கடந்த ஜனவரி பிற்பகுதியில் வட கொரிய தனது எல்லைகளை மூடியமை குறிப்பிடத்தக்கது.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை