மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

இன்று (26) இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை ஆழ்கடல் பிரதேசங்களில்  அவ்வப்போது மழையோ அல்லது, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தென்கிழக்கு பகுதியிலான ஆழமான கடற்பரப்பில் அருட்டப்பட்டுள்ள முகில் கூட்டங்கள் காரணமாக, இம்மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்தோடு ஏனைய இடங்களிலும் அடை மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, இடியுடன் கூடிய மழையுடன் காற்றின் வேகமானது திடீரென மணிக்கு 70-80 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புக் காணப்படுதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வேளையில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீன்பிடியில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுமாறு மீன்பிடி சமூகங்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Sun, 07/26/2020 - 12:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை