ஓகஸ்ட் முதலாம் திகதி கட்டார் எல்லை திறப்பு

வெளிநாட்டு பயணிகள் கட்டார் வருவதற்கு ஓகஸ்ட் முதலாம் திகதி நாட்டு எல்லையை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்நாட்டு பிரஜைகள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் நாட்டிற்கு வர மற்றும் வெளியேறுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறைவாக இருக்கும் நாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா சோதனைக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதோடு ஒரு வாரம் வீட்டில் சுய தனிமையில் இருப்பதற்கான உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும் என்று அரச தொடர்பாடல் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏழு நாட்களின் பின் பயணிகளுக்கு இரண்டாவது சோதனை மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டால் விடுவிக்கப்படவுள்ளனர்.

எனினும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால் தனிமைப்படுத்தலுக்காக அரச நிலையம் ஒன்றுக்கு அனுப்பப்படுவார். இந்த குறைந்த அபாயம் கொண்ட நாடுகள் பட்டியலில் இடம்பெறாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தாம் பயணிப்பதற்கு 48 மணிநேரத்திற்குள் தமக்கு வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றினை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.     

Thu, 07/23/2020 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை