பெண்களுக்கு அதிகாரத்தை வழங்க ஐ.தே. கட்சி தயார்

ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவிப்பு 

பெண்களின் பொருளாதார மற்றும் அவர்கள் சமூகதில் தலை நிமிர்ந்து வாழும் ஒரு சூழலை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி பல திட்டங்களை முன்வைத்துள்ளது என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி அமைப்புகளுக்குள் பெண்களுக்கு 25% ஒதுக்கீடு கடந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டார். 

மாகாண சபைகளுக்குள் பெண்கள் 25% ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டங்களை இயற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார். 

குறிப்பாக அரச நிறுவனங்கள், பங்குச்சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களிலும் பெண்களுக்கு ஒரு ஒதுக்கீட்டை வழங்க திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி பெண்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் முன்னாள் பிரதமர் கூறினார். 

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்வரும் அரசாங்கத்தின் கீழ் பெண்களுக்கு சிறந்த வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும் என்றும் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

Wed, 07/22/2020 - 08:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை