வெனிசுவேல தங்கத்தை பெற மடுரோவுக்கு முட்டுக்கட்டை

இங்கிலாந்து வங்கியில் வைக்கப்பட்டுள்ள 1 பில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்தை பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் வெனிசுவேல அரசுக்கு எதிராக இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

நிகொலஸ் மடுரோவுக்கு பதில் வெனிசுவேல எதிர்க் கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவையே அந்நாட்டு ஜனாதிபதியாக பிரிட்டன் அங்கீகரித்திருப்பதாக அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குறித்த தங்கத்தை வங்கி விடுவிப்பதற்கு எதிராக பிரிட்டன் அரசு தொடுத்த வழக்கிற்கே தீர்ப்புக் கிடைத்துள்ளது.

ஏற்கனவே நிதி நெருக்கடியை சந்தித்திருக்கும் வெனிசுவேல ஜனாதிபதி மடுரோவுக்கு இது பெரும் பின்னடைவாக உள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கு இந்தத் தங்கம் தேவைப்படுவதாக மடுரோ குறிப்பிட்டுள்ளார். எனினும் இதனை அவரின் கையில் கொடுத்தால் ஊழல் இடம்பெறும் என்று குவைடோ தெரிவித்துள்ளார்.

குவைடோவை வெனிசுவேல ஜனாதிபதியாக 50க்கும் அதிகமான நாடுகள் அங்கீகரித்தபோதும் மடுரோ சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவை பெற்றுள்ளார். மடுரோ தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் இருப்பதோடு இராணும் மற்றும் பொலிஸை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

Fri, 07/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை