அமெரிக்க பாடகரின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் ஆரம்பம்

பிரபல பாடகரான கென்யே வெஸ்ட் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை வழக்கத்திற்கு மாறான முறையில் ஆரம்பித்துள்ளார்.

43 வயதான வெஸ்ட் தமது சொந்த கட்சியான பிறப்புக் கட்சியில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.   

தெற்குக் கரோலினாவின் சார்ல்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்பை அடையாளப்படுத்தும் குண்டு துளைக்காத ஆடையுடன் தோன்றி வெஸ்ட், பரபரப்பான உரை ஒன்றை நிகழ்த்தினார். கருக்கலைப்பு பற்றியும் அடிமை விவகாரம் பற்றியும் அவரது உரையில் குறிப்பிட்டுக் கூறப்பட்டிருந்தது. தனது மனைவி கருக்கலைப்பு செய்வதற்கு விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

வெஸ்டின் உரை சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதோடு அவரது மனநிலை குறித்து பலரும் அதில் கேள்வி எழுப்பி கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு குறைவான காலம் இருக்கும் நிலையிலேயே ரெப் பாடகரான வெஸ்ட் கடந்த ஜூலை 4 ஆம் திகதி டொனால்ட் டிரம்பை எதிர்த்து தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Tue, 07/21/2020 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை