காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சகல விடயங்களிலும் அரசாங்கம் முன்னுரிமை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவிப்பு

யுத்தச் சூழல் காரணமாக காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் தீவிர கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு கிழக்கில் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் பல்வேறு வகைகளிலும் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.நேற்று காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேசிய பத்திரிகைகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு விடயங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதுடன் அரசாங்கத்தின் உதவிகள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு சகல விடயங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படுவதகவும் அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் கால கொடுப்பனவுகள் இதன் போது வழங்கப்பட்ட 5,000 ரூபாய் நிவாரணம் அவர்களது குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை