குற்றச்செயலை அறிவிக்க; பொலிஸாரால் இரு புதிய தொலைபேசி இலக்கங்கள்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான முறைப்பாடுகளை முன் வைப்பதற்காக பொலிஸ் தலைமையகம்இரு விசேட தொலைபேசி இலக்கங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.  

அதற்கிணங்க பொலிஸ் தலைமையகத்தின் ​இரகசிய பிரிவு மூலம் இது நிர்வகிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.  

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;  

போதைப்பொருள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயற்பாடுகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக பொலீஸ் தலைமையகம் இரண்டு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  

அதற்கிணங்க 1997 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் அதற்கான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.  

இனங்களுக்கிடையிலான சமாதானத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள், பாரிய மோசடிகள், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், கப்பம் கோரல், ஊழல் மோசடிகளில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை மேற்படி தொலைபேசி இலக்கத்தின் மூலம் முறைப்பாடு செய்ய முடியும்.  

அதேவேளை 1917 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதனோடு தொடர்புடையவர்கள் மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முறைப்பாடுகள் தொடர்பில் இரகசியம் பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(ஸ)  

லோரன்ஸ் செல்வநாயகம்  

Tue, 07/28/2020 - 08:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை