கொரோனா; கொழும்பில் எவருக்கும் அறிகுறி இல்லை

சில சமூக ஊடகங்களில் வதந்தி - அனில்

கொழும்பு அல்லது அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே அனில் ஜாசிங்க, இச் செய்திகளில் உண்மை யில்லையென குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்கன மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலேயே அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 419 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலும், 11 பேர் சேனாபுரா மறுவாழ்வு மையத்திலும் உள்ள கைதிகள் எனவும் 63 பேர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையதில் பணிபுரியும் ஊழியர்கள் எனவும் மேலும் 16 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Wed, 07/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை