புதிய அமைச்சரவையில் செந்திலுக்கு முக்கியமானதொரு அமைச்சு பதவி

பொதுஜன பெரமுன அரசில் செந்தில் தொண்டமானுக்கு மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வழங்குதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியை கைப்பற்றும் எனவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார அலுவலகம் பசறையில் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது,....

ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களுக்கு ஆற்றிய சேவைகளை மறக்க முடியாது. அவர் மிகச் சிறந்த தலைவராகத் திகழ்ந்தார். இலங்கையில் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கும் மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் போராடியவர்.

அதேபோன்று பதுளையில் செந்தில் தொண்டமான் சக்திமிக்க தலைவராக செயற்பட்டு வருகிறார். ஊவா மாகாணத்துக்கு அவர் ஆற்றியுள்ள சேவைகள் அளப்பறியன. சிறுபான்மை மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை செந்தில் தொண்டமானால் வழங்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. ஆதலால் பதுளை மக்கள் இணைந்து செந்தில் தொண்டமானின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். எமது ஆட்சி அமைந்ததன் பின்னர் செந்தில் தொண்டமானுக்கு அமைச்சரவையில், பெரும் சேவைகளை ஆற்றக்கூடிய மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் நாம் நிச்சயமாக ஏழு ஆசனங்களைக் கைப்பற்றுவோம்.

அதில் செந்தில் தொண்டமானின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு விட்டது எனத் தெரிவித்தார்.

Wed, 07/08/2020 - 04:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை