சேனைப்பயிர் உற்பத்தியாளரின் காணி, வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு

அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தும் என்கிறார் அமைச்சர் பந்துல

சேனைப் பயிர் உற்பத்தி போன்ற வாழ்வாதாரங்களிலிருந்து தமது வாழ்க்கையை கொண்டு நடத்தும் கிராம மக்கள் எதிர்கொண்டுள்ள காணி பிரச்சினைகளை குறைப்பதற்கான முறையொன்றை வகுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என  அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத்தின் எஞ்சிய காடு என்ற ரீதியில் கருதப்படும் காணிகளை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்களுக்கு மாற்றுவதற்கு பொருத்தமான நடைமுறையொன்றை வகுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதன் நோக்கம் சேனைப் பயிர் உற்பத்தி போன்ற வாழ்வாதாரங்களிலிருந்து தமது வாழ்க்கையை கொண்டு நடத்தும் கிராம மக்களின் காணி பிரச்சினைகளை குறைப்பதேயாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களினால் நிர்வகிக்கப்பட்டுவந்த அரசாங்கத்தின் எஞ்சிய காடு என்ற ரீதியில் அடையாளங்காணப்பட்ட காணிகள் வன வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள 2001.08.10 ஆம் திகதி இலக்கம் 05/2001 சுற்றறிக்கையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்படுத்தப்படும். இதன் காரணமாக அரசாங்க காணிகளில் சேனைப்பயிர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குறைந்த வருமானத்தைக்கொண்ட பெரும் எண்ணிக்கையிலான விவசாய குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.

இந்த காணிகளை ஏதேனும் பயனுள்ள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவேண்டுமாயின் அதற்கான நீண்டகால திட்டமொன்று இல்லாமையே இதற்கான காரணமாகும். இதனால் அடர்ந்த வனம் அல்லாத இந்த நோக்கத்திற்கான காணிகளில் முறையான பலன்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டுள்ளன. 

இந்த சிரமங்களை கவனத்திற்கொண்ட அமைச்சரவை இது தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து எஞ்சிய வன பகுதி மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த காணிகளை தற்காலிகமாக பொருத்தமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடிய வகையில் அதற்கான அதிகாரங்களை மாவட்ட செயலாளர் , பிரதேச செயலாளர்களிடம் வழங்குவதற்கு பொருத்தமான நடைமுறையொன்றை வகுத்து அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் வளங்கள் அமைச்சரிடம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  இதில் இந்த காணிகளின் உரிமையை தொடர்ந்தும் அரசாங்கம் கொண்டிருப்பதைப்போன்று சுற்றாடல் மற்றும் வன ஜீவராசி வளங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது முக்கிய காரணியாக அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்கமைவாக இதன் மூலம் இந்த காணிகளின் உரிமை, சுற்றாடல் அல்லது வன ஜீவராசிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில் சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் மாற்றப்படும் முறையொன்று வகுக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Mon, 07/06/2020 - 06:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை