பிரான்ஸ் பழம்பெரும் தேவாலய தீ சம்பவம் குறித்து சந்தேகம்

பிரான்சின் நன்டெஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தீ வைப்புச் சம்பவம் என்று அரச வழக்குத் தொடுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேவாலயத்தின் மூன்று இடங்களில் ஆரம்பித்த இந்த தீ, ஒரு தீவைப்புச் சம்பவம் என்று புலன்விசாரணைளர்கள் சந்தேகிக்கின்றனர். இந்தத் தீயினால் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த செயின்ட் பீர் எட் செயின்ட் போல் என்ற தேவாலயத்தின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பெரிய இசைக் கருவி சேதமாகியுள்ளன.

பாரிசில் உள்ள வரலாற்று புகழ்வாய்ந்த நொட்ரே டாம் தேவாலயத்தில் இடம்பெற்ற தீச் சபம்பவத்தின் ஓர் ஆண்டுக்கு பின்னரே இது இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த தேவாலயத்தின் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் நொட்ரே டாம் அளவு சேதம் ஏற்படவில்லை என்றும் நகர தீயணைப்புப் பிரிவுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை இந்த தீ ஏற்பட்டதோடு 100க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை