உலக கொரோனா தொற்றில் லத்தீன் அமெரிக்கா முதலிடம்

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் பதிவான மொத்த கொரோனா வைரஸ் சம்பவங்களை லத்தீன் அமெரிக்க பிராந்தியம் முதல் முறையாக விஞ்சி இருப்பது ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரம் காட்டுகிறது.

பிரேசில், மெக்சிகோ, பெரு, கொலம்பியா மற்றும் ஆர்ஜன்டீன நாடுகளில் வைரஸ் தொற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரித்த நிலையிலேயே அந்த பிராந்தியத்தில் தொற்று எண்ணிக்கை உச்சம் அடைந்துள்ளது.

லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் கொரொனா வைரஸ் தொற்று சம்பவங்கள் வேகமாக அதிகரிப்பது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உலகில் மொத்த கொரோனா தொற்று சம்பவங்களில் 26.83 வீதத்தை பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் பதிவான மொத்த கோரானா தொற்று சம்பவங்கள் 4,308,495 ஆக இருக்கும் நிலையில் லத்தீன் அமெரிக்காவில் அது 4,328,160 ஆக தற்போது அதிகரித்திருப்பதாக ஒவ்வொரு நாடுகளினதும் உத்தியோகபூர்வ தரவுகளைக் கொண்டு ரோய்ட்டர்ஸ் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் தெரியவருகிறது.  

எனினும் அதிக நோய்த் தொற்று மற்றும் உயிரிழப்பு கொண்ட ஒற்றை நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 4.2 மில்லியன் வைரஸ் தொற்று சம்பவங்களுடன் சுமார் 146,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் 2.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு 87,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.    

கொவிட்–19 சம்பவங்களில் முதல் பத்து நாடுகளில் மெக்சிகோ, பெரு மற்றும் சிலி நாடுகளும் உள்ளடங்குகின்றன.  

ரோய்ட்டர்ஸ் தரவுகளின்படி, உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 16.1 மில்லியனாக அதிகரித்துள்ளது.

எனினும் குறிப்பாக பல நாடுகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் காரணமாக நோய்த் தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு பற்றிய தரவுகள் கூறப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Tue, 07/28/2020 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை