மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற வேண்டும்

எல்.ரீ.ரீ.ஈ சவாலுக்கு 2ஆம் பட்சமாகாத பாரிய சவால் முறியடிப்பு

எல்.ரீ.ரீ.ஈ. பிரச்சினைக்கு இரண்டாம்பட்சமாகாத கொரோனா பிரச்சினைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக முகங்கொடுத்து வருகிறது.

மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுத்தர வேண்டும்.  இவ்வாறு முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் வேட்பாளருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.  வாக்குறுதிகளை அள்ளி வழங்கி எதிரணி தேர்தல் செய்கிறது.

ஆனால் அவை வெறும் வாக்குறுதிகள் மாத்திரமே.  எல்.ரீ.ரீ.ஈ சவாலுக்கு குறைந்துவிடாத பாரிய சவாலை ஜனாதிபதி முகங்கொடுத்தார்.சவால்களுக்கு மத்தியில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது.இதனை மேலும் பலப்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் தேவை. கொரோனாவை வெற்றிகரமாக முறியடித்த மூன்றுநாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. உலக நாடுகள் பலவும் பாராட்டியுள்ளன. 

போதைப்பொருளை கட்டுப்படுத்த பாரிய திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.பாதாள உலக செயற்பாடுகள் முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வௌிநாடுகளில் இருந்து கிடைக்கும் அந்நியச் செலாவணி தடைப்பட்டுள்ளது.இதிலும் இனவாதம் பரப்பப்படுகிறது. 

காத்தான்குடி பல்கலைக்கழகத்தை ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிட முடியாது. பெருமளவு செலவில் வளங்களுடன் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என ஆணைக்குழு விசாரணையில் வெ ளிவருகிறது. 

நாட்டிற்குள் எடுத்துவரப்படும் வளங்கள் சமமாக நாட்டிற்குள் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.நாட்டிற்குள் கொண்டுவரப்படும் பணம் தொடர்பில் கணக்காய்வு செய்யப்பட வேண்டும்.சட்ட குறைபாடுகள் இருந்தால் திருத்தப்பட வேண்டும்.போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளினூடாக பெறப்படும் பணம் வேறு பெயர்களில் வங்கிகளில் வைப்புச் செய்யப்படுகிறது. 

நாட்டை தூர நோக்குடன் முன்னேற்ற ஜனாதிபதியாலும் பிரதமரினாலும் தான் முடியும். ஜனாதிபதியுடன் பணியாற்ற தனக்கு சக்தி இருப்பதாக சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.பாரிய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காகவே செயலணி உருவாக்கப்பட்டது. (பா)

Tue, 07/07/2020 - 05:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை