தொழில்நுட்ப விடயங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துக்கு உட்பட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் ஊடாக புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப துறையின் மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதுடன் இந்த தயாரிப்புக்களுக்கு சந்தையை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக உயர்கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல், வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். 

தேசிய பல்கலைக்கழகத்துக்காக தொழில்நுட்ப பீடத்தை ஸ்தாபிப்பதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படுவதுடன் தொழில்நுட்ப பீடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு துறையில் பணியாற்றுவதற்காக அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். 

இதேபோன்று இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கியமாக இளைஞர் சமூகத்தினர் மிகவும்ஆக்கபூர்வமான செயற்றிறன் மிக்கவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இவர்களது ஆற்றலுக்கு பொருத்தமான சூழல் மற்றும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டால் பெரும்பாலான துறைகளின் ஊடாக புதிய தயாரிப்புக்கள் மற்றும் ஆய்வுகளை அறிமுகப்படுத்துவதற்கு இவர்கள் பணியாற்றுவது உறுதி என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

உயர்கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் மாலபேயில் அமைந்துள்ள தொழில்துறை தொழில்நுட்ப (ITI)  நிறுவனம் நாட்டின் தற்போதைய தேவைக்கு பொருத்தமான வகையில் கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கு தேவையான புதிய தயாரிப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களது இந்த தயாரிப்புக்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் தேவையான வசதிகளை செய்வதற்கு உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக Alcohol சார்ந்த மூலிகைகளை அடிப்படையாக கொண்டு கிருமித் தொற்று நீக்கிகளை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருள் மற்றும் தயாரிப்பு முறைதொழில்துறை தொழில்நுட்ப (ITI) நிறுவனத்தின் மூலம் ஆயர்வேத கூட்டுத்தாபனத்திற்கு வழங்கி, சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இருதரப்பு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.இந்த தயாரிப்புக்களின் விற்பனைக்காக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் மூலம் வசதிகள் செய்யப்படும். 

இதற்கு அமைவாக இலங்கை மாணவர்களின் ஆய்வின் மூலம் வெளியிடப்படும் இவ்வாறான தேசிய தயாரிப்புக்களை அபிவிருத்தி செய்து சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் வசதிகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

Tue, 07/28/2020 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை