Header Ads

மலேசியாவின் லங்காவி தீவு அருகே ரொஹிங்கியர்கள் உயிருடன் மீட்பு

மலேசியாவின் லங்காவி தீவு அருகே கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்பட்ட ரொஹிங்கிய அகதிகள் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அகதிகள் ஒரு சிறிய தீவிலிருந்த புதருக்குள் மறைந்திருந்ததாக மலேசியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிறன்று லங்காவி எல்லையில் சிறிய படகில் அகதிகள் சிலர் மலேசியாவிற்குள் செல்ல முயன்றனர். கள்ளத்தனமாக கடலில் இருந்து அவர்கள் கரைக்குச் செல்ல முயன்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சினர்.

ஆனால், அகதிகள் சிறிய தீவுக்குள் மறைந்து இருந்ததை தேடல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட ரொஹிங்கிய அகதிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல் தொடர்பில், ரொஹிங்கிய அகதிகள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். அகதிகள் பெரிய படகில் இருந்து சிறிய படகிற்கு மாற்றப்பட்டு நாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழையத் திட்டமிடுவதாக அதிகாரிகள் கூறினர்.

மியன்மாரில் அடக்குமுறையை எதிர்கொள்ளும் ரொஹிங்கிய அகதிகளில் பெரும்பாலோருக்கு விருப்பமான புகலிடமாக மலேசியா கருதப்படுகிறது.

மலேசியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு இல்லை என்று தெரிந்தும் ரொஹிங்கிய அகதிகள் தொடர்ந்து கள்ளத்தனமாக அங்கு செல்ல முயன்று வருகின்றனர்.  

Tue, 07/28/2020 - 08:59


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.