சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்

சீனாவில் கடந்த ஒருசில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 33 நதிகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக நீர்வள அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு மழை நீடிப்பதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. சீனாவில் வெள்ள காலம் ஜூன் மாதம் ஆரம்பித்த நிலையில் கடந்த திங்கட்கிழமையாகும்போது 433 நதிகள் மற்றும் டொங்டின், பொயங் மற்றும் டாய் போன்ற பிரதான ஏரிகளின் நீர் மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டி உயர்ந்திருப்பதாக பிரதி நீர்வள அமைச்சர் யி ஜியான்சுன் தெரிவித்துள்ளார்.

1961 ஆம் ஆண்டு பதிவு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இல்லாத அளவுக்கு சராசரி மழைவீழ்ச்சியும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் 141 பேர் உயிரிழந்து, பலரும் காணாமல்போயிருப்பதோடு 60 பில்லியன் யுவான் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக சீன அவசரநிலை அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை கூறியது.

சீனாவின் மிகப்பெரிய நதியான யங்சே பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்கனவே ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டிருப்பதாக வெள்ளக் கட்டுப்பாட்டு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Wed, 07/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை