பள்ளிவாசலாக மாற்றுவது குறித்த தீர்ப்பில் தாமதம்

துருக்கியின் ஸ்தான்புல் நகரில் உள்ள ஹெகியா சோபியா கட்டடத்தை ஒரு பள்ளிவாசலாக மாற்றுவது குறித்த தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று ஒத்திவைத்துள்ளது.

இது பற்றி நேற்று 17 நிமிடங்கள் மாத்திரமே விசாரணை இடம்பெற்ற நிலையில், இது தொடர்பான தீர்ப்பு 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று துருக்கியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவான அரச சபை குறிப்பிட்டுள்ளது. யுனெஸ்கோ மரிபுரிமைச் சொத்தான 1,500 ஆண்டுகள் பழமை கொண்ட ஹெகியா சோபியா ஆரம்பத்தில் ஒரு கிறிஸ்தவ தேவாலயமாக இருந்து பள்ளிவாசலாக மாற்றப்பட்டு பின்னர் 1930களில் ஒரு அருங்காட்சியகமானது.

இந்நிலையில் நீதிமன்றம் அங்கீகரித்தால் அது மீண்டும் பள்ளிவாசலாக மாற வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது இதனை பள்ளிவாசலாக மாற்றுவது பற்றி துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும் இந்த நகர்வு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அரசியல் மற்றும் சமயத் தலைவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fri, 07/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை