அரசியலமைப்பை உருவாக்க உறுதியான அதிகாரம் தேவை

தமிழ்-முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும்
மக்களின் ஏகோபித்த ஆதரவை கோருகிறார் பெசில்

நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது நோக்கமாகும். அதற்கு மக்கள் தெளிவான அதிகாரத்தை பெற்றுத் தர வேண்டும்.

எமது அரசாங்கம் குறித்து நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களிடம் கோருகிறோம். நீங்கள் வழங்கும் வாக்குகளுக்கான பாதுகாப்பையும் பொறுப்பையும் நிறைவேற்றுவோம் என பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், 

தனிமைப்படுத்தல் சட்டங்களையும் தேல்தல் சட்டங்களையும் மதித்து வேட்பாளர்கள் நடக்க வேண்டும். எதிர்க்கட்சியொன்று இல்லாமை எமக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.கோரோனா தொற்றை கட்டுப்படுத்தியது போன்று நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம். 

தேர்தல் காரணமாக இரண்டாவது கொரோனா அலை ஏற்படாது. ஏற்படக் கூடாது என பிரார்த்திக்கிறோம். பாரிய கட்சி கட்டமைப்பினூடாக எமது பிரசார செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்க இருக்கிறோம். 

எமக்கிடையில் விருப்பு வாக்கிற்காக மோதிக்கொள்வதை தவிர எமக்கு தேர்தலில் எந்த போட்டியும் கிடையாது.19 ஆவது திருத்தம் மட்டுமன்றி நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது நோக்கமாகும். 1976 யாப்பில் 19 திருத்தங்கள் நடந்துள்ளன. ஒவ்வொருவரது தேவைக்கும் அழுத்தத்திற்கும் திருத்தங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டு மக்களின் நலன்களுக்கு ஏற்றவகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்க மக்கள் தௌிவான அதிகாரத்தை பெற்றுத் தர வேண்டும்.இன்றேல் சிலரது பணயக் கைதியாக மாறி அரசியலமைப்பை மாற்றும் நிலை உருவாகும்.19 ஆவது திருத்தம் தொடர்பில் பொறுப்பேற்க இன்று எவரும் கிடையாது.  கடந்த காலத்தில் எமது வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்னர் கைதாகியுள்ளனர்.தேர்தல் நடுநிலையாக நடைபெற வேண்டும்.நாம் அவ்வாறு பழிவாங்க மாட்டோம்.தவறு செய்தோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

கொரோனாவிலிருந்து நாம் எழுச்சி பெற அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும்.அதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். 

ஆகஸ்ட் 6 ஆம் திகதிக்குப் பின்னர் வரும் புதிய அரசாங்கத்தில் 2021 ற்கு நவம்பரில் புதிய அரசின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.3,4 வருடங்களுக்கு நாட்டை கட்டியெழுப்பும் முன்னெடுப்புகள் இடம்பெறும்.                                        (பா)

ஷம்ஸ் பாஹிம்  

Thu, 07/09/2020 - 05:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை