முடக்க நிலைக்கு எதிராக செர்பியாவில் ஆர்ப்பாட்டம்

செர்பியத் தலைநகர் பெல்கிரேட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான முடக்க நிலை மீண்டும் அமுல்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலகமடக்கும் பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டது.  

வைரஸ் தொற்று அதிகரித்ததை அடுத்து வார இறுதி ஊரடங்குச் சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பத்தில் அமைதியாகவே இடம்பெற்றது. எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு நுழைய முயன்றபோது அதனை பொலிஸார் தடுத்தனர். மோதல் வெடித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். இதில் பலரும் காயமடைந்துள்ளனர்.  

செர்பியாவில் இதுவரை16 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு 330 பேர் உயிரிழந்துள்ளனர்.    

Thu, 07/09/2020 - 07:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை