தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் மீண்டும் கந்தகாட்டுக்கு அனுப்பி வைப்பு

அவர் மூலமாக சமூகத்தில் வைரஸ் பரவும் ஆபத்து இல்லை

ஐ. டி.எச் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா வைரஸ் நோயாளி இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள கொரோனா வைத்தியசாலை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் அங்கிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தப்பிச் சென்றார்.

அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அருகில் நடமாடிக் கொண்டிருந்த நிலையில் இராணுவத்தினர் அவரை கைது செய்து மீண்டும் ஐ. டி. எச் ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில், பின்னர் அங்கிருந்து தற்போது, கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பிச்சென்ற குறித்த கொரோனா தொற்றுறாளர் மூலம் சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை