தற்போதைய அரசாங்கத்தில் உறவுமுறையிலான ஆதரவு​ அரசியலுக்கு இடமில்லை

ஜனாதிபதி சித்தப்பாவாகவும் பிரதமர் தந்தையாகவும் இருந்தபோதும் தற்போதைய அரசாங்கத்தில் உறவுமுறை ஆதரவு அரசியலுக்கு (NEPOTISM) இடமில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

அவர்  கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் “நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் உங்களின் உறவினராக இருக்கின்ற போதும் நாட்டின் பிரச்சினைகளை நேரடியாக தீர்க்காமல் ஏன் டுவிட்டர் ஊடாக உரையாற்றுகிறீர்கள்” என கேள்வியொன்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த போதே நாமல் ராஜபக்ச, மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். 

நாட்டில் எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான நேரடி கலந்துரையாடல்களிலும் கூட்டங்களிலுமே உரையாற்றுகிறேன் . ஆனால் கூட்டங்களுக்கு வெளியே விடயங்களைப் பற்றி நான் விவாதிப்பதில்லையென்றும் அவர் கூறினார்.  

வீட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் நிறைய வித்தியாசமுள்ளது. இதுபோன்ற விடயங்களை வீட்டில் விவாதிக்க எனக்குரிமை இல்லை. அதுவே எனது நிலைப்பாடு என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பதிலளித்தார்.

Sun, 07/19/2020 - 10:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை