தேர்தல் மேடைகளில் அவதூறு; அநாகரீகம் வடக்கிலே அதிகம்

தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் மக்கள் முன் தாங்கள் கடந்த காலத்தில் செய்தவற்றையும், எதிர்காலத்தில் செய்யப் போகின்றவற்றையும் சொல்லி வாக்குகள் கேட்பதற்கு பதிலாக எதிர்தரப்பினர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசி அரசியல் செய்யும் அநாகரீகம் வடக்கில்தான் அதிகரித்துள்ளது என கேடயச் சின்னத்தில் சுயேச்சைக் குழு 5 இல் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.  

மக்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது என்பது தங்ள் சார்பாக அவர்கள் செயற்படவேண்டும், பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே ஆனால் தமிழர் அரசியலில் எத்தனை பேர் உண்மையாக வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக பணியாற்றுகின்றனர்? எனக் கேள்வி எழுப்பிய அவர் மக்களும் தாங்கள் வாக்களித்து தெரிவு செய்துவிட்ட பிரதிநிதிகளை நோக்கி கேள்வி கேட்பதுமில்லை. மக்களின் இந்த பலவீனமே தங்களின் பதவிக் காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் மீண்டும் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வருவதற்க வழி சமைக்கிறது. எனவே மக்கள் இனியும் அப்படி இருக்க முடியாது. மக்களால் தெரிவு தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளை பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்த வேண்டியது மக்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி குறூப் நிருபர்  

Thu, 07/30/2020 - 07:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை