மக்கள் நலன் கருதி தேர்தலை பிற்போடவும்

ரணில், சஜித் அரசிடம் கோரிக்கை

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா மோசமாக பரவ ஆரம்பித்துள்ளதால் மக்களின் நலனுக்காக தேர்தலை பிற்போடுவதே உகந்தது என அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். 

தேசிய பத்திரிகை ஆசிரியர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாஸிவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று கோல்பேஸ் ​ஹோட்டலில் நடைபெற்றது. 

கொரோனா மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.இந்த நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்தது.தேர்தலை ஒத்திவைக்காது தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை ஏற்க முடியாது.சுகாதார முறைகளை பின்பற்றி நாம் பிரசாரங்களை செய்து வருகிறோம்.ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை பின்போடுவது தான் உகந்தது.அதற்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.  நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனா அபாயம் பற்றி எச்சரித்தேன்.ஆனால் அரசாங்கம் என்னை கேலி செய்தது. அரசாங்கமே தேர்தல் தினத்தை அறிவிக்கும் நிலை இருந்தது. இந்த நிலையிலே ஆணைக்குழு திகதியை அறிவித்தது.பிரசாரங்களுக்கு நிபந்தனை இடுவது எதிரணிக்கே பாதிப்பாகிறது. தேவையற்ற நிபந்தனைகளை ஏற்ப முடியாது. இன்று நிலைமை மோசமாகியுள்ளது. 

Tue, 07/14/2020 - 09:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை