'வைரஸில் இருந்து பாதுகாப்பு' விளம்பரம் செய்த ஆடை நிறுவனத்திற்கு அபராதம்

தங்கள் உடற்பயிற்சி ஆடைகள் கொவிட்–19 நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று கூறி விளம்பரப்படுத்திய குற்றத்திற்காக அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதை அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லோர்னா ஜேன் எனப்படும் அந்த நிறுவனத்திற்கு சுமார் 28,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இணையத்தளத்தில் விற்பனைக்குள்ள உடற்பயிற்சி ஆடைகள் பலவகை வைரஸ் தொற்றிலிருந்தும் கொவிட்–19 நோய்த் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது போன்ற விளம்பரங்கள் மக்களுக்கு ஒரு பொய்யான பாதுகாப்பு உணர்வை அளிப்பதாக அதிகாரிகள் கூறினர்.

அதனால், மக்கள் சுகாதாரத்தையும் பாதுகாப்பு இடைவெளியையும் சரியாகக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

“எங்கள் ஆடைகள் வைரஸ் தொற்றிலிருந்து முழுப் பாதுகாப்பு அளிக்கும் என்று கூறவில்லை. கைகளைக் கிருமி நாசினி பாதுகாப்பதுபோல், எங்கள் ஆடைகளும் கூடுதல் பாதுகாப்புத் தரும் என்று கூறவே முயற்சி செய்தோம்” என்று நிறுவனம் விளக்கம் அளித்தது.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை