சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்​ பாலி வீரகொடி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்ரீபாலி வீரகொடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி மித வேகப் பந்துவீச்சு வீராங்கனையான ஸ்ரீபாலி வீரகொடி, தான் ஓய்வுபெறுவதை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீபாலி வீரகொடி 89 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 ரி 20 போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதுடன், முறையே ஒருநாள் போட்டிகளில் 58 விக்கெட்டுகள் மற்றும் 722 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். அதேநேரம், ரி 20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், 209 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

தன்னுடைய இந்த முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீபாலி வீரகொடி, “14 வருடங்கள் என்ற மிக அதிகமான காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதுடன், இதுபோன்ற நாளில் நான் எனது ஓய்வை அறிவிக்கிறேன். நான் ஓய்வை அறிவிப்பதற்கான முக்கிய காரணம், எதிர்காலத்தில் உருவாகும் புதிய வீராங்கனைகளுக்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காகவே நான் ஓய்வுபெறுகிறேன். அதுமாத்திரமின்றி எனது கற்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தவேண்டும்.

அனைவருக்கும் இளம் சந்ததியினருக்கு வாய்ப்பை கொடுத்து, நாம் குறித்த இடத்திலிருந்து விலகவேண்டிய நேரம் வரும். குறித்த தருணம் எனக்கு இப்போது வந்துள்ளது என நினைக்கிறேன். எனவே, நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறேன்” என்றார். ஸ்ரீபாலி வீரகொடி இந்த தீர்மானத்தை தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்டுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீபாலி வீரகொடி இறுதியாக 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகளிர் ரி 20 உலகக் கிண்ணத் தொடரில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 07/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை