இரண்டாம் கொரோனா அலை பிரகடனப்படுத்தும் நிலை இல்லை

கந்தகாட்டில் PCR பரிசோதனைகள் பூர்த்தி

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு  உட்படுத்தப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவரதும் PCR  பரிசோதனைகள் பூர்த்தி செய்யப்பட்டடிருப்பதாக இராணுவ தளபதியும் கொவிட் தொற்று பரவலைத் தடுப்பதற்கான மத்திய செயற்பாட்டு நிலையத்தின்  பொறுப்பாளருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இரண்டாம் அலையை  இதுவரையில் பிரகடனப்படுத்தக்கூடிய நிலை நாட்டில் இல்லை என்றும் அவர் கூறினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவ தளபதி மேலும்  தெரிவிக்கையில், இவர்களுடன் சம்பந்தப்பட்ட குடும்பத்தவர்களும்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான PCR பரிசேதைனையை வெளியிடுவதற்கான நடவடிககை  ஆரம்பமானது.

இதேவேளை சில நகரங்களில் இங்கும் அங்கும் தொற்று நோயாளர்கள் இருப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு காரணம் சில தொற்றுக்கு உள்ளானவர்கள்  அடையாளம் காணப்படும் பட்சத்தில் அது தொடர்பாக பிரதேச சுகாதார அதிகாரிகள்  உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்படும்.

இவர்கள் இந்த நோயாளிகளுடன் தொடர்புபட்ட  இரண்டாம் நிலை நோயாளர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் கவனம்  செலுத்துவர். இதனால் அந்த பகுதியில் தொற்று நோயாளர் இருப்பதாக சிலர்  தெரிவிப்பதே இந்த நிலைக்கு காரணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது கொரோனா இரண்டாவது அலை நிலை இல்லை.

இரண்டாம் அலையை  இதுவரையில் பிரகடனப்படுத்தக்கூடிய நிலை நாட்டில் இல்லை என்றும் அவர்  கூறினார். இருப்பினும் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை  தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி கோரிக்கை  விடுத்தார்.

பொதுத் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடாது என்றும் அவர் கூறினார்.  இருப்பினும் பொலிசார் கோரிக்கை விடுக்கும் பட்டத்தில் அவர்களுக்கு  ஒத்துழைப்பு வழங்குவதற்காக மாத்திரம் இராணுவம் பங்களிப்பு செய்யும் என்றும் அவர் கூறினார்.

Thu, 07/16/2020 - 04:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை