ரஷ்யா விண்வெளியில் ஆயுத சோதனை: அமெ. குற்றச்சாட்டு

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் செய்மதிகளை இலக்கு வைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் விண்வெளியில் ஏவுகணை போன்ற ஆயுதம் ஒன்றை ரஷ்யா சோதிப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளன.

அண்மைய செயற்பாடுகள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செய்மதி எதிர்ப்பு ஆயுதமாக இருக்கக் கூடும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய விண்வெளி உபகரணங்களின் செயற்பாடுகளை சரிபார்ப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

எனினும் ரஷ்யாவின் புதிய செய்மதி செயற்பாடுகள் பற்றி அமெரிக்கா முன்னதாக கவலையை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டனும் முதல் முறையாக, விண்வெளியில் ரஷ்யா ஆயுத சோதனை ஒன்றை மேற்கொண்டிருப்பது பற்றி குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் அச்சுறுத்தலை மோசமான வகையில் குறைத்து மதிப்பிட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.   

இது விண்வெளி சோதனை என்று ரஷ்யா கூறிவரும் நிலையில், இந்த ஏவுகணையானது ஆயுதங்கள் போல இருப்பதாக, அதாவது ஓர் ஆயுதத்திற்கான பண்புகளைக் கொண்டிருப்பதாக பிரிட்டன் கூறுகிறது.

Sat, 07/25/2020 - 06:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை