ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பலரும் கைது

சீனாவினால் கொண்டுவரப்பட்ட புதிய பாதுகாப்புச் சட்டம் ஹொங்கொங்கில் நேற்று அமுலுக்கு வந்த நிலையில், சுதந்திரத்திற்கு ஆதரவான கொடியை ஏந்தி வந்த ஒருவர் உட்பட பல ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங்கில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து 23 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு பொலிஸார் மிளகுப்பொடி தெளிப்பிகளை பயன்படுத்தினர்.

புதிய சட்டத்தின்கீழ் 4 நடவடிக்கைகள் குற்றமாகக் கருதப்படுகின்றன. சீனாவிடமிருந்து விலகிச் செல்வது, அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படுவது, பயங்கரவாதம், வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து சட்ட விரோதமாகச் செயல்படுவது ஆகியவை குற்றங்களாகும்.

அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும்.

இருப்பினும், ஹொங்கொங்கின் தன்னாட்சித் தகுதி ஒருபோதும் பாதிக்கப்படாது என்று ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்தார்.

1997 ஆம் ஆண்டு ஹொங்கொங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதை ஒட்டி ஆண்டுதோறு ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றபோது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்முறை அதற்கு முதல் முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் நகர மத்தியில் இடம்பெற்ற சிறிய ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டது. இதன்போது குறைந்தது 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை