அமெரிக்கர்கள் முகக்கவசம் அணிய உத்தரவிட மாட்டேன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிடமாட்டேன் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அங்கு நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரான மருத்துவர் அந்தோனி பவுச்சி, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள டிரம்ப், மக்களுக்கென குறிப்பிட்ட சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும், அனைவரும் முகக்கவசம் அணிந்தால் கொரோனா மறைந்துவிடும் என்ற கருத்துக்கு தான் உடன்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரே ஒருமுறை மட்டுமே டிரம்ப் முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் வந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் அந்த நோய்த் தொற்று மேலும் தீவிரமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை