சமுர்த்தி உதவி பெறுவோருக்கு வட்டி இல்லாத கடன் திட்டம்

செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

சமுர்த்தி உதவி பெறுவோருக்கு சுயதொழில் மற்றும் சிறு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டு வந்த வட்டி இல்லாத கடன் வழங்கும் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி கடன் வழங்கும் செயற்பாடுகள் நேற்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது. 

அந்த வேலைத்திட்டம் தொடர்பில் தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி , சமுர்த்தி உதவி பெறுவோருக்கு சுயதொழில் மற்றும் சிறு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வட்டியில்லாத கடனாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  அதே வேளை ,அதற்கு மேலதிகமாக நான்கு வீத வட்டியில் 50,000 ரூபா கடன் பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம் 

Wed, 07/22/2020 - 06:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை