டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் ஓ பிரையனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தங்களது பெயரை தெரிவிக்க விரும்பாத அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஓ பிரையனுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் தென்படுவதாகவும், அவர் பாதுகாப்பான இடத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவர் மூலம் ஜனாதிபதிக்கு துணை ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இல்லை என்றும், தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பணிகள் தடையின்றி நடைபெறும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஓ பிரையன் தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவருக்கு கொரோனா தொற்று பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Wed, 07/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை