மருதூர் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

மயோன் குறூப் கம்பனியின் அனுசரணையில் மருதூர் ஸ்போர்ட்ஸ் லீடர் கழகம் நாடத்தும் "மருதூர் பிரிமியர் லீக்" கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு (18) சாய்ந்தமருது வொலிவோரியன் பொது விளையாட்டு மைதானத்தில் மருதூர் ஸ்போர்ட்ஸ் லீடர் கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ஹகீம் சரீப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களும் மற்றும் கெளரவ அதிதியாக மயோன் குறூப் கம்பனியின் உரிமையாளர் றம்லி முஸ்தபாவும் விசேட அதிதிகளாகவும் மற்றும் முன்னாள் மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் எம்.எஸ்.எம்.மஸ்சூட், விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எம். றிபாஸ் மற்றும் தொழிலதிபர் சஃரான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மருதூர் பிரிமியர் லீக்- 2020 கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது மட்டுப்படுத்தப்பட்ட 15 ஓவர் கொண்டதாகும். இப்போட்டியில் சாய்ந்தமருது பகுதியில் உள்ள முன்னனி 12 கழகங்களை ஒன்றினைத்து அதில் ஆறு கழகங்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டியாக இப்போட்டி இடம்பெறுகிறது.

மருதூர் லயன்ஸ், மருதூர் பைடர்,மருதூர் சாலேன்ஞ்சர்ஸ், மருதூர் நைட் ரைடரஸ், மருதூர் வொரியஸ், மருதூர் ஸ்டைகர்ஸ், ஆகிய 06 அணிக்கள் இப் போட்டியில் ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப போட்டியில் மருதூர் சாலேன்ஞ்சர்ஸ் மற்றும் மருதூர் ஸ்டைகர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின ஆரம்பத்தில் துடுப்பாடிய மருதூர் சாலேன்ஞ்சர்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர் முடிவில் 6 விக்கட்டுக்களை (142 /6)ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய மருதூர் ஸ்டோகர்ஸ் அணியானது(143/5 )நிர்ணய இலக்கை அடைந்து இறுதி பந்தின் மூலம் 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

இவ் ஆரம்ப விழாவில் சாய்ந்தமருது பகுதியில் உள்ள பிரபல விளையாட்டு கழகங்களில் உள்ள கடின பந்து விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் முகமாக 120 பேருக்கு அதிதிகளினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டமை நிகழ்வில் விசேட அம்சமாகவிருந்தது.

இவ் சுற்று தொடரில் வெற்றி பெறும் அணிக்கு தலா 20,000 ரூபா பணிப்பரிசும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 10,000 ரூபா பணம் பரிசும் மற்றும் கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளது மேலும் இவ் கடின பந்து கிரிக்கெட் லீக் சுற்று போட்டியின் இறுதி போட்டிக்கள் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(26) சாய்ந்தமருது பொலிவொரியன் மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.

முதற் தடவையாக சாய்ந்தமருதில் உள்ள அனைத்து கடின பந்து விளையாட்டு கழகங்களையும் ஒன்றிணைத்து "மருதூர் பிரிமியர் லீக்" சுற்று போட்டிகள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sat, 07/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை