சூரியனை மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட படம் வெளியீடு

சூரியனை இதுவரை இல்லாத நெருக்கத்திற்கு சென்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சூரியனில் இருந்து 77 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பெரும் தீப்பிழம்புகள் போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.

நாசா விஞ்ஞானிகள் மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் இணைந்து சூரியனின் சுற்றுப்பாதையை ஆய்வு செய்ய இ.எஸ்.ஏ என்ற திட்டத்தை கடந்த பெப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தி வருகின்றனர்.

இதில் சூரியனைப் பற்றிய பலவகையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த ஆய்வு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையும் என்றும் அறிவியல் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Sat, 07/18/2020 - 11:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை