லா லிகா: கெட்டேஃப் அணிக்கெதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அணி வெற்றி

லா லிகா கால்பந்து தொடரின் கெட்டேஃப் அணிக்கெதிரான போட்டியில், ரியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றுள்ளது.

அல்ஃபிரடோ டி ஸ்டெபனோ விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இப்போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் சிறப்பாக விட்டுக்கொடுக்காமல் ஆக்ரோஷமாக விளையாடின.

போட்டியின் 79ஆவது நிமிடத்தில் செர்ஜியோ ராமோஸ் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அணிக்காக வெற்றி கோலை புகுத்தினார்.

மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டியின் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது. லா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை ரியல் மட்ரிட் அணி 74 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கெட்டேஃப் அணி 52 புள்ளிகளுடன் ஆறூவது இடத்தில் உள்ளது.

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை