91 வயதான குவைட் மன்னர் மருத்துவமனையில் அனுமதி

குவைட் மன்னர் 91 வயது செய்க் சபாஹ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து முடிக்குரிய இளவரசர் அவரது அதிகாரங்களை தற்காலிகமாக ஏற்றுள்ளார்.

மன்னர் வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன்னர் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக குறிப்பிட்டபோதும் அது பற்றி மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அவரது சகோதரரான 83 வயது செய்க் நவாப் அல் அஹமது அல் சபாஹ், பல பொறுப்புகளையும் தற்காலிகமாக ஏற்றுள்ளார்.

கடந்த ஒக்டோபரிலும் மன்னருக்கு உடல் நிலை பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து அமெரிக்கா சென்றிருந்தபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பல தசாப்தங்களாக வெளியுறவு அமைச்சராக இருந்து 2006 ஆம் ஆண்டு குவைட் மன்னராக முடிசூடிய செய்க் சபாஹ் அந்நாட்டு வெளிநாட்டு கொள்கையை வடிவமைத்தவர் என்று பாராட்டப்படுகிறார்.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை